கிரிக்கெட் (Cricket)

கேப்டனாக விரும்பவில்லை.. தலைவனாக விரும்புகிறேன்.. சூர்யகுமார் யாதவ்

Published On 2024-07-31 12:49 GMT   |   Update On 2024-07-31 12:49 GMT
  • வீரர்கள் அனைவரும் சக வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
  • நான் பேட்டிங் செய்ய செல்லும் போது அழுத்தத்தை உணர்கிறேன்.

பல்லகெலே:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலன 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே எடுத்தது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில் நான் எப்போதும் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன் என சூர்யகுமார் யாதவ் விளக்கம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடைசி 2 ஓவரைக் காட்டிலும் 48 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த பின்னரும் அனைவரும் நம்பிக்கையோடு ஆடினர். அதுதான் மகிழ்ச்சியான விஷயம். இந்த பிட்ச்சில் 140 ரன்கள் என்பதுதான் சராசரி ஸ்கோர். அதனால் அதுதான் எங்கள் இலக்காக இருந்தது. அப்போது நம்பிக்கையோடு விளையாடினால் நிச்சயம் வெல்வோம் எனக் கூறினேன்.

வீரர்கள் அனைவரும் சக வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நான் பேட்டிங் செய்ய செல்லும் போது அழுத்தத்தை உணர்கிறேன். எப்போதும் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News