செய்திகள் (Tamil News)

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்- ராமதாஸ்

Published On 2018-05-14 03:55 GMT   |   Update On 2018-05-14 03:55 GMT
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கடலூரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
கடலூர்:

பா.ம.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அதற்காக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர் வள செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் அதை வரவேற்போம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss
Tags:    

Similar News