செய்திகள்

வேறு வேலை இல்லாததால் தமிழகத்தில் எதிர்கட்சிகள் விமர்சிக்கிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-05-18 05:57 GMT   |   Update On 2018-05-18 05:57 GMT
வேறு வேலை இல்லாமல் போனதால் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது குறித்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பேசிவருகிறார்கள் என்று கும்பகோணத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கும்பகோணம்:

கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிப்பெற்று எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்று இருப்பது கர்நாடக மக்கள் பிரச்சனைக்கு மட்டுமின்றி தமிழக விவசாய மக்களின் பிரச்சனைக்கெல்லாம் தீர்வுக்கான தொடக்கம். கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளும், பல அமைப்பை சேர்ந்தவர்களும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் போனதால் எரிச்சலில் பேசிவருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது என கூறியுள்ளார். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி உயர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் குட்டிக்கரணம் அடிக்கும் குட்டி அல்ல என்பதை திருமாவளவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News