செய்திகள் (Tamil News)

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலை- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Published On 2018-06-15 03:27 GMT   |   Update On 2018-06-15 03:27 GMT
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். #sterlite #AnbumaniRamadoss
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு புற்றுநோயை வெகுமதியாக வழங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமையாகவும், செல்லத்தக்கதாகவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நாளையே(இன்று) அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக பட்டியலிட்டு தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றலாம். அதனடிப்படையில் புதிய மூடல் ஆணையை பிறப்பிக்கலாம். அதுதான் சட்டப்படி செல்லத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #sterlite #AnbumaniRamadoss
Tags:    

Similar News