செய்திகள் (Tamil News)

ஒகேனக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்

Published On 2018-07-18 07:24 GMT   |   Update On 2018-07-18 07:24 GMT
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வரும் வடமாநில சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் போலீசார் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. மெயின் அருவி, ஐவர் பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இன்று 10-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. இதை கவனிக்காமல் ஆந்திரா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் கார், வேன்-பஸ்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருகிறார்கள்.

அவர்களை ஒகேனக்கல் வனத்துறை சோதனை சாவடி அருகே வருவாய் மற்றும் வனத்துறையினர் போலீசார் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

அவர்கள் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்த்து விட்டு செல்பி எடுத்து திரும்பி செல்கிறார்கள்.

Tags:    

Similar News