செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்- கனிமொழி

Published On 2018-12-02 05:22 GMT   |   Update On 2018-12-02 05:22 GMT
“மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்” என சென்னையில் நடந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #Kanimozhi
சென்னை:

டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் சென்னையில் ‘மாற்றுத்திறனாளிகள் அரசியல் மாநாடு’ நடந்தது. இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருணையோடு நிறைவேற்றித்தர வேண்டிய அவசியமில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. மாற்றுத்திறனாளிகளுக்காக பல நல்ல திட்டங்களை தி.மு.க. நிறைவேற்றி தந்திருக்கிறது.

ஆனால் என்று எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் என்ன பிரச்சனை? என்று கேட்கக்கூட நாதியில்லாத ஒரு சூழலில் தமிழக மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள். ஆனால் காலில் ‘காலிபர்’ சாதனம் போட்டிருக்கும் காரணத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கோவில்களில் அனுமதி இல்லை. கடவுளின் குழந்தைகளுக்கு கடவுளை காணக்கூட உரிமை இல்லையா? பெண்களை தெய்வங்கள் என்று போற்றும் அளவுக்கு மதிப்பு தருவதில்லை. கடவுளின் குழந்தை என்றெல்லாம் அழைக்க வேண்டாம். மனிதர்களாக மதித்தால் போதும்.

இதற்கு மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும். உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #DMK #Kanimozhi
Tags:    

Similar News