தமிழ்நாடு
மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள்
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது
தஞ்சாவூர்,மே.29-
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக 2021-2022ம் ஆண்டிற்கு வளைகோல்–பந்து லீக் விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவில் ஜூன் 2022ம் மாதத்தில் நடைபெற இருப்பதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 1.6.22 அன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான வளைகோல்பந்து விளையாட்டு போட்டியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, ஹாக்கி கழக மற்றும் கிளப் அணிகளில் உள்ள ஆண்கள் அணி மட்டுமே கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வளைகோல்பந்து லீக் போட்டிகள் 1.6.22 அன்று காலை 9 மணிக்கு துவங்கும். வளைகோல்பந்து லீக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள அணிகள் தங்கள் அணியினை தஞ்சாவூர் மாவட்டப் பிரிவு வளைகோல்பந்து பயிற்றுனர் கைப்பேசி எண்.9865662797 மற்றும் அலுவலக தொலைபேசி எண்.04362-235633-ல் தொடர்பு கொண்டு 31.5.22ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும்.
முதல் இடத்தில் வெற்றி பெறும் ஹாக்கி அணி மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள முடியும். மேலும், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் அணியி–னருக்கு பயணப்படியோ, தினப்படியோ தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படமாட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.