தமிழ்நாடு (Tamil Nadu)
null

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமின் கடந்து வந்த பாதை.. முதல்வரை விமர்சித்து அதிமுக பதிவு

Published On 2024-09-26 14:57 GMT   |   Update On 2024-09-26 14:58 GMT
  • உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிஎதை அடுத்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.
  • செந்தில் பாலாஜிக்காகவும் செல்லும் எல்லைகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், "ராஜ் பவன் சென்று தேநீர் அருந்தினார். ஹெச்.ராஜாவுடன் கை குலுக்கினார். அண்ணாமலையுடன் அலவலாடினார். ராஜ்நாத் சிங்கை வைத்து நாணயம் வெளியிட்டார். இவ்வளவும் எதற்காக?

மாற்றம் வரவேண்டும்- உதயநிதிக்கு. ஏமாற்றம் வரக்கூடாது- செந்தில் பாலாஜிக்கு. ஏமாற்றம் வரவில்லை. நன்றி தெரிவிக்க டெல்லிக்கு காவடி எடுக்க கிளம்பிவிட்டார் மு.க.ஸ்டாலின். அடுத்து மாற்றம் தானே?

மக்களுக்கு என்றால் எதுவும் செய்ய மனமற்றவர், தன் மகனுக்காகவும், தன் ரகசியங்கள் அறிந்த செந்தில் பாலாஜிக்காகவும் செல்லும் எல்லைகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News