தமிழ்நாடு (Tamil Nadu)

உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார் - சீமான் கிண்டல்

Published On 2024-09-26 10:42 GMT   |   Update On 2024-09-26 12:15 GMT
  • லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
  • கார்த்தி பேசியதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை என்று சீமான் தெரிவித்தார்.

திருப்பதி லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். கோவிலின் படிக்கட்டுகளை பவன் கல்யாண் சுத்தம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.

இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இதனையடுத்து நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் கார்த்தி - பவன் கல்யாண் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சீமான் , "கார்த்தியிடம் நெறியாளர் லட்டு பற்றி கேட்டிருக்க கூடாது. ஆனாலும் அந்த கேள்விக்கு கார்த்தி நாகரீகமாக பதில் சொல்கிறார். அவரது பேச்சு யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் இல்லை. இதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை.

உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார் என்று அவர் கிண்டலாக தெரிவித்தார். 

Tags:    

Similar News