தமிழ்நாடு (Tamil Nadu)

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

Published On 2024-09-26 12:00 GMT   |   Update On 2024-09-26 17:00 GMT
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
  • வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. எப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து காத்துக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை சற்று நேரம் முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, "உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்.

பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை" என நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கு, "விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பி தெரிவித்தது.

இதனால், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

2024-09-26 15:11 GMT

அண்ணா நினைவிடத்தை தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்திலும் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

2024-09-26 15:06 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

2024-09-26 14:20 GMT

சிறையில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்களை தூவி மரியாதை செலுத்துகிறார்.

2024-09-26 14:11 GMT

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன். என் மீதான பொய் வழக்கில் இருந்து சட்ட ரீதியில் சந்தித்து நிச்சயம் வெளிவருவேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு, சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன்" என்றார்.

2024-09-26 13:58 GMT

செந்தில் பாலாஜியின் கழுத்தில் கறுப்பு, சிவப்பு துண்டு அணிவித்தும், மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2024-09-26 13:56 GMT

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை வரவேற்றனர்.

2024-09-26 13:46 GMT

ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.

2024-09-26 13:28 GMT

ஜாமீனில் வெளியே வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறை வாயிலுக்கு ஆர்.எஸ்.பாரதி வருகை.

2024-09-26 13:14 GMT

புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை வெளியே விடுவதற்கான பணியை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

2024-09-26 13:09 GMT

புழல் சிறை வாயிலில் மேள, தாளங்களுடன் வரவேற்க செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால், புழல் சிறையை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News