தமிழ்நாடு

தமிழக கல்லூரிகளின் பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது: ஆளுநர் ஆர்.என். ரவி

Published On 2024-05-28 14:26 GMT   |   Update On 2024-05-28 14:26 GMT
  • தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக (நேற்று, இன்று) நடைபெற்றது.

இன்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் விடுதலை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழக கல்லூரிகளின் பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது. வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் இணைந்தனர். சுதந்திர போராட்ட இருட்டடிப்பு தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிடும்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

Tags:    

Similar News