தமிழ்நாடு (Tamil Nadu)

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2024-09-23 15:56 GMT   |   Update On 2024-09-23 15:56 GMT
  • முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
  • அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகினர்.

இலங்கையின் 9 ஆவது அதிபராக அனுர குமார திசநாயக இன்று காலை பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசநாயகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நமது அண்டை நாடான இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்ற திரு. அனுரா குமார திசநாயகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."

"கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News