தமிழ்நாடு (Tamil Nadu)

முட்டுக்காட்டில் தூர்வாரும் பணி- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

Published On 2024-10-13 15:32 GMT   |   Update On 2024-10-13 15:32 GMT
  • மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.
  • பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தூர்வாரும் பணி.

வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

வடகிழக்கு பருவமழை வருவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர் ஆய்வு செய்து வருகிறோம்.

சென்னையின் மழைநீர் வடிகாலுக்கான முக்கிய நீர் வழித்தடமாக இருக்கின்ற அடையாறு ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தோம்.

நீர்வளத்துறைச் சார்பில் ஆகாயத்தாமரையை அகற்றுதல், மணற்திட்டுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்துதல் என அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைக் கேட்டறிந்தோம்.

பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம் - பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News