ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் கைது- கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
- கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல்.
- 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின்பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அருளின் செல்போன், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனிடம் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.