தமிழ்நாடு
வெங்காயத்தை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள்.

வெங்காயம் சாகுபடி இந்த ஆண்டு கை கொடுக்குமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-12-23 05:45 GMT   |   Update On 2022-12-23 05:45 GMT
  • நாட்டு வெங்காயம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தனித்தும் ஊடுபயிராகவும் பயிடப்பட்டுள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் விதையாக ஊன்றிய வெங்காய அளவு கூட மகசூலாக எடுக்க முடியவில்லை.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் கடந்த மாதம் புரட்டாசி பட்டத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை செடிகளை பயிரிட்டு உள்ளனர்.

அவற்றில் நாட்டு வெங்காயம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தனித்தும் ஊடுபயிராகவும் பயிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 70 கிலோ கொண்ட 10 பை விதை வெங்காயம் ஊன்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் இருந்து போதிய மழை பெய்யாததால் வெங்காயத்தில் நண்டுக்கால், திருகல், அழுகல் நோயால் பாதிக்கப்பட்டது.

உரிய மருந்து தெளித்தும் நோய் கட்டுப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் வேலை ஆட்கள் கூலி அதிகரித்துவிட்டதால் செலவு வரம்பு மீறியது. ஏக்கருக்கு களை பறிக்க ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கனமழை பெய்ததால் நிலத்தில் ஊன்றிய வெங்காயத்தை கூட கண்ணில் காண முடியவில்லை. தற்போது சாகுபடி செய்து 70 நாட்களுக்கு மேலாகிவிட்டதால் சில கிராமங்களில் வெங்காயம் மகசூல் அறுவடைக்கு வந்துள்ளது. நல்ல திரட்சியான வெங்காயம் கிலோ ரூ.60 முதல் 70 வரை வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் விதையாக ஊன்றிய வெங்காய அளவு கூட மகசூலாக எடுக்க முடியவில்லை. தற்போது ஓரளவு விலை உள்ளது.

இதே விலை அறுவடை முடியும் வரை நிரந்தரமாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்நஷ்டத்தை சந்தித்த வெங்காய சாகுபடி விவசாயிகள் அதன் சாகுபடி பரப்பை பெருமளவு குறைத்து விட்டனர். எனவே இந்தாண்டாவது செய்த செலவை ஓரளவு ஈடுகட்டிவிடலாமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Tags:    

Similar News