தமிழ்நாடு

8 மாதங்களில் ரூ.50 கோடி ஊழல்- திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்.ஈ.கே. மூர்த்தி மீது பரபரப்பு புகார்

Published On 2024-09-13 14:13 GMT   |   Update On 2024-09-13 14:13 GMT
  • நகரமன்ற தலைவர் என்.ஈ.கே மூர்த்தி ஊழல் செய்ததாக பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.
  • குடும்பத்துடன் ஊரைவிட்டு காலி செய்துவிடுங்கள் இல்லை என்றால் நான் உங்களை காலி செய்துவிடுவேன் என கொலை மிரட்டல்.

சென்னை அருகே திருவேற்காடு நகராட்சியில் 10 வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் நளினி குருநாதன். திருவேற்காடு திமுக இலக்கிய அணியில் துணை அமைப்பாளராக உள்ள இவரது கணவர் குருநாதன் திருவேற்காடு நகராட்சியில் ஒப்பந்த முறையில் குப்பை அகற்றும் பணி செய்ததாக கூறி நளினி குருநாதன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி கடந்த 8 மாதத்தில் 50 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக புகார் தெரிவித்து, ஊழல் பட்டியலை கழுத்தில் மாலையாக அணிந்தபடி குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகரமன்ற தலைவர் என்.ஈ.கே மூர்த்தி ஊழல் செய்ததாக பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கணவன் மனைவி, "அப்போது என் கணவர் பெயரில் குப்பை கான்ராக்ட் எடுத்து பல லட்சம் அதில் சம்பாதித்ததோடு அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக தன்னை தகுதி நீக்கம் செய்துள்ளார். 

இதனை கேட்டதற்கு குடும்பத்துடன் ஊரைவிட்டு காலி செய்துவிடுங்கள் இல்லை என்றால் நான் உங்களை காலி செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுகிறார்.

போடாத சாலைக்கு பில் போடுவது, குப்பை அகற்றுவதில் முறைகேடு, மிக்ஜாம் புயல் தடுப்பு நடவடிக்கை, சுகாதரப் பிரிவு, கால்வாய் அமைப்பது, டெங்கு தடுப்பு, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு வாங்கியது, அம்மா உணவகத்தில் உணவு சமைக்காமலே கணக்கு காட்டி பல லட்சம்

என பல வழியில் முறைகேடு செய்துள்ளார். அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது" என்றார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Tags:    

Similar News