தமிழ்நாடு

எதிர்காலத்தில் விஜய் முதலமைச்சர் ஆவார் என நம்புகிறேன்- மாணவன் சின்னத்துரை

Published On 2024-06-28 07:34 GMT   |   Update On 2024-06-28 07:34 GMT
  • முதல் கட்டமாக இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார்.
  • மாணவன் சின்னத்துரை அருகே அமர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சின்னத்துரை கடந்த ஆண்டு சாதிய வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் இன்று முதல் கட்டமாக 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார்.

இதில் மாணவன் சின்னத்துரைக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தார். இதன்பின்னர் மாணவன் சின்னத்துரை கூறுகையில், முதல் ஆளாக விஜய் தன்னுடைய அருகில் அமர்ந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் முதலமைச்சர் ஆவார் என நம்புகிறேன். இப்போதே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். முதலமைச்சர் ஆனால் கல்விக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் மாணவன் சின்னத்துரை அருகே அமர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News