தமிழ்நாடு

கர்நாடக அரசை கண்டித்து பானைகளை ஏந்தியப்படி விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2024-07-13 08:58 GMT   |   Update On 2024-07-13 08:58 GMT
  • கர்நாடகா, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
  • கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடகா தற்போது தேக்கி வைத்துள்ள தண்ணீரை உடனடியாக டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பானை மற்றும் செடிகளை தலையில் தூக்கியப்படி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நுழைய முற்பட்டனர். ஆனால் வாயில் கதவை மூடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அலுவலகம் வெளியே சாலையில் படுத்து கிடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News