தமிழ்நாடு (Tamil Nadu)

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி - விரைவில் மக்களை சந்திக்கிறார் விஜய்

Published On 2024-06-18 05:24 GMT   |   Update On 2024-06-18 05:24 GMT
  • தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.
  • விஜய் மக்களை சந்திக்க திட்டமிடுவதாக தகவல்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பதிவு செய்யப்பட்டது.

பிறகு, தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது. உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டு இருந்தது.

இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது. இடையில் வரும் மற்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், விஜய் விரைவில் மக்களை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுக்க மக்கள் சந்திப்பு பயணங்கள் மூலம் விஜய் மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கை பற்றிய தகவல்கள் கட்சியின் முதல் மாநாட்டில் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News