தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தின் 3-வது துணை முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-09-29 02:46 GMT   |   Update On 2024-09-29 04:09 GMT
  • 2009ம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.
  • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் கடந்த 2006-11ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். மே 29ம் தேதி 2009ம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.

தமிழகத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இதன்படி கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.) தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News