தமிழ்நாடு
ஜெயங்கொண்டத்தில் காலணி உற்பத்தி தொழிற்சாலை- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது.
- புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஜெயங்கொண்டத்தில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.