செய்திகள் (Tamil News)

விமானத்தளம் மீது வீசப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் முறியடித்தது

Published On 2017-03-17 09:05 GMT   |   Update On 2017-03-17 09:05 GMT
சிரியாவில் உள்ள தங்களது விமானத்தளத்தின் மீது வீசப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் முறியடித்துள்ளது.
ஜெருசலேம்:

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின் காரணமாக சில சமயங்களில் ராக்கெட் குண்டுகள் அண்டை நாடான இஸ்ரேல் நாட்டிற்குள் விழுவது வழக்கம். இதனால் இஸ்ரேல்-சிரியா இரு நாடுகளும் அவ்வப்போது மோதிக்கொள்ளும்.

இந்த நிலையில், சிரியாவில் உள்ள தங்களது விமானத்தளத்தில் வீசப்பட்ட ஏவுகணையை முறியடித்ததாக இஸ்ரேல் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சிரியாவில் உள்ள எங்களது ராணுவத்தளத்தின் மீது வீசப்பட்ட ஏவுகணை தடுக்கப்பட்டது. அது வெடிக்கும் சத்தம் ஜெருசலேத்திற்கு அப்பால் கேட்டது. ஏவுகணை வெடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை” என தெரிவித்துள்ளது.



ஹெஸ்பொல்லா என்ற ஈரானிய அமைப்பு சிரியா போராளிகளுடன் இணைந்து ஆயுதங்கள் கடத்துவதை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த ஏவுகணையை வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது.

சிரியாவில் நிரந்தர ராணுவம் அமைக்க ஈரான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு இதுதொடர்பாக புதினிடம் விவாதம் நடத்தியுள்ளார்.

Similar News