செய்திகள் (Tamil News)

அணுகுண்டு மையத்தை நிர்மூலமாக்க முடிவு - வடகொரியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

Published On 2018-05-12 22:48 GMT   |   Update On 2018-05-12 22:48 GMT
அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க முடிவு செய்துள்ள வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். #kimjongun #trump
வாஷிங்டன்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யேரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க முடிவு செய்துள்ள வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.  
வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #kimjongun #trump
Tags:    

Similar News