உலகம் (World)

அமெரிக்காவில் சூறைக்காற்றால் 3 பேர் பலி- 34 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின

Published On 2023-04-22 03:56 GMT   |   Update On 2023-04-22 03:56 GMT
  • சூறைக்காற்றால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன.
  • 34 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பல பகுதிகள் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக 8 முறை கடுமையான சூறைக்காற்றை சந்தித்தன. இதனால் பெய்த கனமழையால் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 34 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.

மேலும் இந்த சூறைக்காற்றால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. இதில் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கிருந்த 3 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். எனவே மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதற்கிடையே ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட், லிங்கன், மெக்லைன் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அவசர நிலை அறிவித்து அந்த மாகாண கவர்னர் கெவிட் ஸ்டிட் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News