செய்திகள்
ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதத்தில் ஆனித்திருமஞ்சனவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அங்குள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சந்திரசேகர் தீட்சிதர் கொடியேற்றினார். பின்பு கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மொத்தம் 10 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலையிலும், இரவு வேளையிலும் தங்க, வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 20-ந் தேதி முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். இதனைத் தொடர்ந்து தனித்தனி தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.
21-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.
22-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.