செய்திகள்
திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இன்று மகாளாய அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

இன்று மகாளய அமாவாசை: திருச்சி காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2018-10-08 04:41 GMT   |   Update On 2018-10-08 05:02 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். #MahalayaAmavasya #PitruTharpanam
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தனர்.

தாய், தந்தை, பாட்டனார் என்று அவர்களை நினைத்து எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப் பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன் னதாக பக்தர்கள் காவிரி ஆற் றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மகாளாய அமாவாசை தினத்தையொட்டி இன்று காலை திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவிந்த பக்தர்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்திய காட்சி.

முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.

இன்று மகாளாய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு மாரியம்மன் ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.  #MahalayaAmavasya #PitruTharpanam
Tags:    

Similar News