செய்திகள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்தகடலில் பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்

Published On 2018-10-08 05:23 GMT   |   Update On 2018-10-08 05:23 GMT
மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். #MahalayaAmavasya #PitruTharpanam
இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக அன்றைய நாட்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

வருடத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட் களில் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருவார்கள்.

அதன்படி மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.



முன்னதாக இன்று காலை அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரத்தில் தற்போது மழை பெய்து வருவதால் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

திருப்புல்லாணி அருகே உள்ள சேதுகரை, தேவிபட்டினம் நவபாஷாணம் கடற்கரையிலும் பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். #MahalayaAmavasya #PitruTharpanam
Tags:    

Similar News