புதுச்சேரி

கோவிலுக்கு அறங்காவல் குழு நியமிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ.மனு அளித்த காட்சி.

கோவிலுக்கு அறங்காவல் குழு நியமிக்க வேண்டும்

Published On 2023-10-21 06:11 GMT   |   Update On 2023-10-21 06:11 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ.மனு
  • காவல்துறை மற்றும் தாசில் தார் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.

 புதுச்சேரி:

உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அறங்காவல் குழு தேர்வு செய்வதில் நடுத்தெரு ஊர் பஞ்சாயத்தார் மற்றும் அங்காளம்மன் கோவில் பஞ்சாயத்தாரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இதனால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் தாசில் தார் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இதுசம்பந்த மாக நடுத்தெரு ஊர் பஞ்சாயத்தார் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அப்போது நடுத்தெரு பொதுமக்கள் முன்னி லையில் கோவிலில் கூட்டம் போட்டு மக்களின் கருத்தை கேட்டு அறங்காவலர் குழு நிர்வாகிகளை முடிவு செய்ய ஆவண செய்ய வேண்டும். ஊர் கோவிலை திறக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

Tags:    

Similar News