புதுச்சேரி

யார் பிரதமர் என்ற சர்ச்சை இந்தியா கூட்டணியில் இல்லை

Published On 2023-12-26 08:00 GMT   |   Update On 2023-12-26 08:00 GMT
  • குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது.
  • புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.

புதுச்சேரி:

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்மொழியப்பட்டார். அவர் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், பிரதமர் வேட்பாளரை பின்னர் தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே யார் பிரதமர் என்ற சர்ச்சை இந்தியா கூட்டணியில் இல்லை.

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது. பல ஆயிரம் மக்கள் இறந்தனர்.


இது இயற்கை பேரிடர். இதை சீர் செய்ய மோடிக்கு 2 ஆண்டாகியது. புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.

ஆனால் தென் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 96 செ.மீ மழை பெய்தது. இது இயற்கை பேரிடர். இதை சமாளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசு செய்யும் நல்லவற்றை கவர்னர் தமிழிசை பாராட்டுவதில்லை. கூட்டணி ஆட்சி நடந்தாலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை முடக்கும் வேலையை பார்க்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News