புதுச்சேரி
கோப்பு படம்

அக்னிபத் திட்டத்தை கண்டித்து தர்ணா போராட்டம்-ஏ.வி.சுப்ரமணியன் அழைப்பு

Published On 2022-06-24 09:16 GMT   |   Update On 2022-06-24 09:16 GMT
  • அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
  • போலீசாருக்கே ஓராண்டு பயிற்சி இருக்கும்போது, ராணுவ வீரர்களுக்கு 6 மாதம் மட்டும் பயிற்சி அளித்து 4 ஆண்டில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு நினைக்கிறது.

புதுச்சேரி:

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

போலீசாருக்கே ஓராண்டு பயிற்சி இருக்கும்போது, ராணுவ வீரர்களுக்கு 6 மாதம் மட்டும் பயிற்சி அளித்து 4 ஆண்டில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு நினைக்கிறது. இது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

அக்னிபத் திட்டத்தை கண்டித்து டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தி ஜனாதிபதியிடம் மனுவும் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை புதுவையில் அனைத்து தொகுதியிலும் வருகிற 27-ந் தேதி காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை தர்ணா போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி புதுவை மாநிலத்தில் அனைத்து தொகுதியிலும் வருகிற 27-ந் தேதி 3 மணி நேர தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார். 

Tags:    

Similar News