புதுச்சேரி

 என்ஜினீயர் தேவதாசுக்கு கவியரசர் கண்ணதாசன் விருது வழங்கப்பட்ட காட்சி.

என்ஜினீயர் தேவதாசுக்கு கவியரசர் கண்ணதாசன் விருது

Published On 2023-12-04 08:12 GMT   |   Update On 2023-12-04 08:12 GMT
  • கவியரசு கண்ணதாசனின் இளையமகன் டாக்டர் கண்ணதாசன் ராமசாமி இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்.
  • சமுதாயப் பணிக ளைப் பாராட்டியும் கண்ண தாசனுக்கு தொடர்ந்து விழா எடுத்துவருவதை போற்றியும் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுக்கோட்டை கண்ண தாசன் இலக்கியச் சாரல் அமைப்பும் சி.எஸ்.கே குளோ பல் அறக்கட்டளையும் இணைந்து 6-ம் ஆண்டு முப்பெரும் விழா கொண்டாடினர்.

இவ்விழாவில் புதுச்சேரி ராதே அறக்கட்டளை நிறுவனரும் கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத் தலைவருமான என்ஜினீயர் ராதே. தேவ தாசுக்கு மொழி, வரலாறு, இலக்கிய, சமுதாயப் பணிக ளைப் பாராட்டியும் கண்ண தாசனுக்கு தொடர்ந்து விழா எடுத்துவருவதை போற்றியும் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

கவியரசு கண்ணதாசன் இலக்கியச் சாரல் நிறுவனர் திருமலை சேகர் முன்னிலையில் இலக்கியச் சாரல் ஜெயக்குமார் தலைமையில் கவியரசு கண்ணதாசனின் இளையமகன் டாக்டர் கண்ணதாசன் ராமசாமி இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார். செயலர் முரளிதரன், கவிஞர் காவிரிமைந்தன் , பாவலர் தங்கம் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.

Tags:    

Similar News