புதுச்சேரி

அடுக்குமாடி குடியிருப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.

அடுக்குமாடி குடியிருப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-11-06 08:36 GMT   |   Update On 2023-11-06 08:36 GMT
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உடையார் தோட்டத்தில் சமுதாய நல கூடம் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.
  • தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், நோயல், சதிஷ், குணா, ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்பு ராயப்பேட்டையில் வீடு இல்லாத 80-க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முயற்சியால் கொண்டு வரப்பட்டது. அப்பணி அரசு மூலம் நடந்து வருகிறது.

அதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உடையார் தோட்டத்தில் சமுதாய நல கூடம் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.

இப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளிடம் பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார்.

அப்போது அவருடன் தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், நோயல், சதிஷ், குணா, ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News