புதுச்சேரி

கோப்பு படம்.

புதியது வாங்கும் வரை பழைய பஸ்களை இயக்க வேண்டும்

Published On 2023-05-01 04:40 GMT   |   Update On 2023-05-01 04:40 GMT
  • போக்குவரத்து தடைபடும் அபாயம் ஏற்படும்.
  • 100 புதிய பஸ்களை வாங்கி வழித்தடத்தில் இயக்கிய பிறகு பழைய பஸ்களை ஒழிக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் மாசை குறைக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அரசு பயன்படுத்தும் பழைய வாகனங்களை ஒழிக்க வழிகாட்டி நெறிமுறையை வகுத்துள்ளது.

அதன்படி, 15 ஆண்டுக்கு மேலான பழைய அரசு வாகனங்களுக்கு தகுதி சான்று பெற முடியாது என அறிவித்துள்ளது. புதுவை யில் அரசு போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.யில் மொத்த முள்ள 130 பஸ்களில் 40 மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவினால் பி.ஆர்.டி.சி.யில் இயக்கப் படும் 40 பஸ்களில் பழைய மாடல் உள்ள 15 பஸ்களில் சேவையை நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் தள்ளப்படும் பி.ஆர்.டி.சி. நிறுவனம் தற்போது மேலும் பஸ்களை இயக்க முடியாததால் அந்த துறை மேலும் சரிவை சந்திக்கும் அபாயமும், பொது போக்குவரத்து சேவை முற்றிலும் தடைபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்தும் முன் சட்டமன்றத்தில் அறிவித்த 100 புதிய பஸ்களை வாங்கி வழித்தடத்தில் இயக்கிய பிறகு பழைய பஸ்களை ஒழிக்க வேண்டும்.

புதிய பஸ்கள் வாங்க தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற்று உடனடியாக பஸ்கள் வாங்க வேண்டும். அதுவரை அரசு பஸ்கள் தங்கு தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News