புதுச்சேரி

காட்டுக்குப்பம் பகுதியில் பேரிகார்டுகள் முறையற்று இருப்பதை படத்தில் காணலாம்.

பேரிகார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2022-12-30 05:04 GMT   |   Update On 2022-12-30 05:04 GMT
  • கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை முறையாக அமைக்காததால் பல பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
  • தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் பேரி கார்டுகளே (தடுப்பு கட்டைகள்) விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

புதுச்சேரி:

கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை முறையாக அமைக்காததால் பல பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து விபத்தை தடுக்கும் விதமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தற்காலிக விபத்து ஏற்படும் பகுதியில் பேரிகார்டு மற்றும் பேரல்கள் போட்டு இரு வழி சாலையாக வைத்திருந்தனர்.

மேலும் பேரிகார்டுக்கு இடையே யாரும் செல்ல முடியாதபடி குருக்கில் மர கம்பத்தை கட்டி வைத்திருந்தனர். இதனால் வாகனத்தின் வேகம் மற்றும் விபத்தை குறைக்க முடிந்தது.

இந்த நிலையில் சாலைக்கு நடுவில் போடப்பட்ட. பேரிகார்டுகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் இருந்த மர கம்பங்கள் சேதமாகியும், இல்லாமலும் இருந்து வருகிறது.

தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் பேரி கார்டுகளே (தடுப்பு கட்டைகள்) விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது. அரியாங்குப்பம் முதல் கன்னியகோவில் வரை கடந்த சில தினங்களில் மட்டும் பேரிகார்டுகளால் 10-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.

பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் மற்றும் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் உடனடியாக தற்காலிகமாக போடப்பட்ட பேரிகார்டுகளை சரிசெய்ய வேண்டும். வரும் புத்தாண்டிற்கு புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. புத்தாண்டில் விபத்தில்லா புதுவையாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News