புதுச்சேரி

கோப்பு படம்.

பக்தர்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கும் கடைகளுக்கு சீல், அபராதம்

Published On 2023-12-03 04:06 GMT   |   Update On 2023-12-03 04:06 GMT
  • காரைக்கால் கலெக்டர் எச்சரிக்கை
  • உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் சுத்தமில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம், கடைக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களுக்கு பாது காப்பான, சுகாதாரமான உணவு கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சில நடவடிக்கை எடுத்து வருகிறது.

அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்பு துறையின் தற்காலிக பதிவு சான்றிதழ் பெற வேண்டும் ஒருவர் பல இடத்தில் அன்னதானம் செய்ய விரும்பினால் தனித்தனியே பதிவு செய்ய வேண்டும். இதற்காக நாளை (திங்கட்கிழமை)தர்பாரேண்யேஸ்வரர் கோவில் கியூ காம்பளக்சில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது. உணவு விடுதிகள், டீ கடைகள், பழரசம், இனிப்பு விற்பவர்கள் சுகாதாரமான உணவை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் சுத்தமில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம், கடைக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தண்ணீர் கேன்களில் தயாரிப்பு நிறுவன உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட லேபிள் இல்லாமல் விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News