புதுச்சேரி

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2024-02-17 11:36 GMT   |   Update On 2024-02-17 11:36 GMT
  • பணப்பலம், அதிகார பலத்தை வைத்து பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது.
  • பாதுகாப்பு, கல்வி, விவசாயம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ திட்டம் ஆகியவற்றுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகிமா சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தகவல் அறியும் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், கட்டாய கல்வி உரிமை சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டங்களை மோடி அரசு முழுமையாக புறம்தள்ளியதுடன், 8.29 கோடி பேரை கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட பட்டியலில் இருந்து நீக்கி வஞ்சித்துள்ளது.

பணப்பலம், அதிகார பலத்தை வைத்து பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது.

பஞ்சாப், அரியானா எல்லையில் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு மோடி அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

பாதுகாப்பு, கல்வி, விவசாயம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ திட்டம் ஆகியவற்றுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. நாட்டில் வளர்ச்சி இல்லை.

அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதும், பல கோடி செலவு செய்து ஆட்சி மாற்றம் செய்வதும் என இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

2024 தேர்தலை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். மோடி மார்த்தட்டி கொண்டே இருக்கலாம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததற்கு மக்கள்தான் காரணம். அதே மக்கள்தான் அவர்களை பதவியில் இருந்து இறக்க போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News