புதுச்சேரி

மணமகனுக்கு திருமண பரிசாக தக்காளி வழங்கிய நண்பர்கள்

Published On 2023-07-25 06:40 GMT   |   Update On 2023-07-25 06:40 GMT
  • ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
  • மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர்.

புதுச்சேரி:

பொதுவாக எந்த மதத்தில் திருமணம் நடந்தாலும் மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.

தற்போது தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.

இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை சுட்டி காட்டும் வகையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியைச் சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர். ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தக்காளியை மண மகனுக்கு பரிசு அளிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News