புதுச்சேரி

புதுவையில் மனமகிழ் மன்ற பெயரில் சூதாட்டம்- 25 பேர் கைது

Published On 2023-02-19 03:52 GMT   |   Update On 2023-02-19 03:52 GMT
  • மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஜான்பால் நகர் உள்ளது. இப்பகுதியில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவது உறுதியானது. மனமகிழ் மன்றத்தில் போலீசார் நுழைவது தெரிந்தவுடனே அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதையடுத்து மனமகிழ் மன்ற உரிமையாளர் அருள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் என மொத்தம் 25 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து 23 செல்போன்கள், 13 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். கைதான நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுவையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய நபர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News