புதுச்சேரி

தீயணைப்பு நிலையத்தில் மழைநீர் ஒழுகிய காட்சி.

கட்டிடங்கள் பழுதாகி ஆபத்தான நிலையில் தீயணைப்பு நிலையம்

Published On 2023-07-04 05:09 GMT   |   Update On 2023-07-04 05:09 GMT
  • கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 3-வது நாளாக நேற்று இரவும் மழை பெய்தது.
  • பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தற்போது தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 3-வது நாளாக நேற்று இரவும் மழை பெய்தது. இதில் புதுவை நகரில் கடற்கரை அருகே சுப்பையா சாலையில் தீயணைப்பு துறைக்கான கட்டிடத்தில் மழை நீர் உள்ளே ஒழுகியது.

புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தற்போது தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. பிரெஞ்சு காலத்தில் கரி குடோனாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு சின்ன சின்ன பராமரிப்பு பணி செய்து அவையே தற்போது தீய ணைப்பு துறை அலுவலக மாக பயன்படுத்த ப்பட்டு வருகிறது.

இங்கு தான் தீயணைப்பு துறை வீரர்கள் இரவிலும் படுத்து உறங்கி அவசர காலத்துக்கு புறப்பட்டு செல்லும் சூழல் உள்ளது. ஆனால் இந்த கட்டிடம் முழுமையாக பராமரிக்கப் படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்கும் மழை நீர் உள்ளே ஒழுகுகிறது. அதே போன்று நேற்று இரவு மழை பெய்த போதும் மழை தண்ணீர் உள்ளே ஒழுகியது. கட்டிடத்தின் உடற்பயிற்சி கூடத்தில் சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.

இந்த மோசமான நிலையிலும் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர் உடை, தீயணைப்பு சாதனங்கள் மழையில் நனைந்துள்ளன. தரை முழு வதும் ஈரம் படர்ந்துள்ளது.

பல இடங்களில் தரையில் பள்ளம் உள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News