புதுச்சேரி

பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி பணிகள் குறித்து மனு அளித்த காட்சி.

சாலை-வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-11-21 05:14 GMT   |   Update On 2023-11-21 05:14 GMT
  • பொதுப்பணி துறை தலைமை என்ஜினீயரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
  • அப்துல்கலாம் அரசு குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி பணிகள் குறித்து மனு அளித்தார்.

உப்பளம் தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பது, வாய்க்கால் கட்டுவது, அம்பேத்கார் சிலையை புதுப்பித்து பூங்காவை சீரமைப்பது போன்ற பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

அதுபோல் அப்துல்கலாம் அரசு குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். அதோடு கனிபாய் தோட்டம், வம்பா கீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், வம்பா கீரப்பாளையம் தெப்பகுளம் வீதி, வம்பா கீரப்பாளையம் பழைய துறைமுகம் கலங்கரை விளக்கம் பின்புறம், உள்ளிட்ட 7 இடங்களில் ஹமாஸ் விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கென்னடி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட தலைமை பொறியாளர் இப் பணிகளை விரைந்து முடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News