புதுச்சேரி

கிராம புறங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணிகள் தயாராகும் காட்சி.

விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணி தீவிரம்

Published On 2022-08-28 08:32 GMT   |   Update On 2022-08-28 08:32 GMT
  • புதுவை கிராமப்புறங்களில் காகிதக் கூழ் மற்றும் களிமண் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்குவது குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது.
  • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கிராமப்பு–றங்களில் காகிதக் கூழ் மற்றும் களிமண் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்குவது குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது.

புதுவை கிராம புறங்களில் உருவாக்கும் விநாயகர் சிலையானது நாடு முழுதும் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படும். அரை அடியிலிருந்து 20 அடி உயரம் வரை விதவிதமான சிலைகளில் உருவாக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விநாயகர் சிலை உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது. மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 2 ஆண்டுகளாக பாழாகிப் போனது.

இந்த நிலையில் புதுவையில் கொரோனா பெருமளவில் குறைந்தால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் எந்த தடையும் இல்லை. மேலும், வழக்கம் போல் விநாயகர் சதூர்த்தியை உற்சாகமாக கொண்டாட நாடு முழுவதும் மாநில அரசுகள் அனுமதித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு புதுவையின் கிராமப்பு–றங்களில் பொம்மை உற்பத்தி–யாளர்கள் உற்சா–கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.

2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப் படுவதால் அதிக அளவில் விநாயகர் பொம்மைகளுக்கு ஆர்டர் வந்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறை லிங்க விநாயகர், பஞ்சமுக விநாயகர், நர்த்தன விநாயகர், பாகுபலி விநாயகர் என உருவாக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ரூ 100 முதல் ரூ 20 ஆயிரம் வரை சிலைகள் கிடைக்கிறது.

Tags:    

Similar News