புதுச்சேரி

நீர் நிர்வாகம், நீர் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

நீர் நிர்வாகம், நீர் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-09-02 05:47 GMT   |   Update On 2023-09-02 05:47 GMT
  • மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்று சிறப்புரையாற்றினார்.
  • சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் நீர் நிர்வாகம், நீர் சிக்கனம், நீர் மூழ்கி மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறு பராமரிப்பு பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஆத்மா திட்டம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார்.

பொறியியல் மற்றும் நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பிரபாகரன் நீர் சிக்கனம் மற்றும் நீர் சேமிப்பு பற்றி விரிவாக விளக்கினார் .

வேளாண் அதிகாரி ஜீவா ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ,சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மதகடிப்பட்டு, வாதானூர்,திருவாண்டார் கோவில் , கலிதீர்த்தாள் குப்பம்,திருபுவனை,சன்னியாசிக்குப்பம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்நத விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News