புதுச்சேரி

பாகூரில் நடந்த நிகழ்ச்சியில் மாதர் சங்க பிரிதநிதிகளிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய காட்சி.

ரேஷன் கடைகளை திறப்பது எப்போது?

Published On 2023-12-01 09:48 GMT   |   Update On 2023-12-01 09:48 GMT
  • கவர்னரிடம் கேள்வி எழுப்பிய பெண்கள்
  • பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாகூர் கிழக்கு பஞ்சாயத்துஇந்த நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் மகாதேவன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வேளாண் துறை, குடிமை பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

இதனிடையே தொடர்ந்து கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் கலந்துரையாடினார். அப்போது கவர்னரிடம் புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லாமல் உள்ளது. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி மாதம் 5 கிலோ அரிசி ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். நீங்கள் எதன் மூலமாக மக்களுக்கு வழங்குவீர்கள்.? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு கேட்டனர். இதற்கு கவர்னர் விரைவில் பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

இருந்தும் அங்கிருந்த இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா, அமுதா உள்ளிட்ட பெண்கள் கவர்னரிடம் திரும்பவும் ரேஷன் கடை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவ காப்பீடு, கியாஸ் மற்றும் வீடு கட்ட மானியம் பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சந்தித்தார். பின்னர் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் கவர்னர் தமிழிசை தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News