மொபைல்ஸ்

ஐபோன் 14-க்கு அதிரடி சலுகை அறிவித்த அமேசான்!

Published On 2022-12-17 04:16 GMT   |   Update On 2022-12-17 04:16 GMT
  • அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு தள்ளுபடி நடைபெற்று வருகிறது.
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது ஆன்லைன் தளங்களில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகிறது.

அமேசான் வலைதளத்தில் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" பெயரில் சிறப்பு விற்பனையை இந்தியாவில் நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி, வங்கி சலுகைகள், மாத தவணை முறையில் வட்டியில்லா சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி என ஏராள பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது துவங்கி இருக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

சிறப்பு விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 78 ஆயிரத்து 740 என மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர சிட்டி யூனியன் மற்றும் ஹெச்எஸ்பிசி வங்கி கார்டுகளுக்கும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 740 என மாறி விடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 28 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 14 மாடலை ரூ. 57 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

ஐபோன் 14 அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

Tags:    

Similar News