மொபைல்ஸ்

அடுத்த வாரம் இந்தியா வரும் ரியல்மி GT நியோ 3T

Published On 2022-09-09 04:17 GMT   |   Update On 2022-09-09 04:17 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்து இருந்தது. அறிமுகம் செய்யப்படும் போதே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் ரியல்மி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுவதும், பின்புறத்தில் ரேசிங் கொடி இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது.


ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் ரியல்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. மேலும் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரிப்ரெஷ் ரேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

ரியல்மி GT நியோ 3T சர்வதேச வேரியண்ட் அம்சங்கள்:

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 GPU மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News