அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 5ஜி வெளியீடு - எந்த நகரத்திற்கு முதலில் கிடைக்கும் தெரியுமா?

Published On 2022-08-26 06:13 GMT   |   Update On 2022-08-26 06:13 GMT
  • இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
  • 5ஜி சேவையை வெளியீடு அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என மத்திய மந்திரி தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் விரைவில் வர்த்தக ரீதியிலான 5ஜி சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறும் போது, இந்தியாவில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார்.

முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் எப்போது 5ஜி சேவைகள் வெளியாகும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.


5ஜி சேவையை வெளியிடுவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட டெலிகாம் வட்டாரங்களில் சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன. அந்த வகையில், அரசு திட்டம் சரியாக இருப்பின் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் வழங்கும் நகரங்கள் பட்டியலை கீழே காணலாம்.

ஆமதாபாத்

பெங்களூரு

சண்டிகர்

சென்னை

டெல்லி

காந்திநகர்

குருகிராம்

ஐதராபாத்

ஜாம்நகர்

கொல்கத்தா

லக்னோ

மும்பை

பூனே

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் 5ஜி சேவை முதற்கட்டமாக வெளியிடப்படும் என எதிர்பாக்கலாம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என தெரிகிறது. வி நிறுவனம் முதலில் டெல்லி பகுதியில் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தனது பயனர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் 5ஜி சேவைகளை வழங்கும் வகையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது.

Tags:    

Similar News