வரி குறைப்பு எதிரொலி: அதிரடியாக குறைந்த ஐபோன்கள் விலை
- மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
- அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.
பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.
புதிய விலை விவரங்கள்:
ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900
ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900
ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900
ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900
ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900
ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.