எண்ட்ரி லெவல் ஐபேட் உற்பத்தி துவக்கம் - இணையத்தில் லீக் ஆன தகவல்
- ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த ஐபேட் மாடல் ரிடிசைன் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து அக்டோபர் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புது ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் பத்தாவது தலைமுறை எண்ட்ரி லெவல் ஐபேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும். 10-ஆம் தலைமுறை ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் ஆப்பிள் ஏ14 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த டேப்லெட் மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இது அளவில் 10.5 இன்ச், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பேக் பேனலில் கேமரா பம்ப், ஹோம் பட்டன் மற்றும் டச் ஐடி உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படும் 9-ம் தலைமுறை ஐபேட் மாடலில் 10.2 இன்ச் டிஸ்ப்ளே, ஏ13 பயோனிக் சிப், 12MP பிரைமரி கேமரா, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.