அறிந்து கொள்ளுங்கள்

பி.எஸ்.என்.எல். 5ஜி இந்திய வெளியீடு - மத்திய மந்திரி கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

Published On 2022-08-04 04:09 GMT   |   Update On 2022-08-04 04:09 GMT
  • இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.
  • ஏலத்தில் அதானி குழுமமும் கலந்து கொண்டு 5ஜி அலைக்கற்றைகளை விலைக்கு வாங்கியது.

மத்திய தொலைத்தொடர்ந்து துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 88 ஆயிரத்து 078 கோடி செலவில் விலைக்கு வாங்கியது.

ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை ரூ. 43 ஆயிரத்து 084 கோடி கொடுத்து வாங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட துவங்கும் என எதிர்பார்க்கலாம்.


இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 2023 முதல் 5ஜி சேவையை வழங்கும் என மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார். மத்திய டெலிமேடிக்ஸ் துறை சார்பில் NSA கோர் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் தயார் நிலைக்கு வந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் வரை சோதனை நடைபெற இருக்கிறது.

"அடுத்த ஆண்டு வார்ரில் இந்திய 5ஜி ஸ்டாக் தயார் நிலைக்கு வந்து விடும். அப்போது பி.எஸ்.என்.எல். மூலம் 5ஜி சேவைகள் வழங்கும் பணிகள் துவங்கி விடும்," என மத்திய மந்திரி மேலும் தெரிவித்தார்.

Tags:    

Similar News