அறிந்து கொள்ளுங்கள்

போன் அறிமுகமாகி 10 நாள் கூட ஆகல... அதற்குள் அப்டேட்டா - நத்திங் போனின் புதிய அப்டேட் எதற்காக?

Published On 2022-07-21 09:19 GMT   |   Update On 2022-07-21 09:19 GMT
  • சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர்.
  • டிஸ்ப்ளேவில் உள்ள கோளாறை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகமானது. பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் இன்று இரவு 7 மணிக்கு தான் விற்பனை தொடங்கப்பட உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், நத்திங் நிறுவனம் அதன் முதல் போனான நத்திங் போன் (1) மாடலுக்கு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில் யூசர் இண்டர்பேஸ், பேட்டரி, கேமரா ஆகியவற்றில் சில மேம்படுத்தல்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் மொத்தம் 93.81 எம்.பி அளவு கொண்டதாகும்.


அதன்படி இந்த அப்டேட்டில் நத்திங் இயங்குதளத்தின் சிஸ்டம் ஒலிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கேமராவில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. குறிப்பாக அதில் HDR10 ப்ளஸுக்கான ஆதரவை பெற்றுள்ளன. இதன்மூலம் ஹெச்டிஆர், போர்ட்ரெய்ட், இரவுக் காட்சி மற்றும் பிற மோட்களுக்கான கேமரா எபெக்ட்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நத்திங் போன் 1-ன் பேட்டரி ஆயுளும் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர். இதனை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News